தெற்காசியாவில் இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது இடம்
Lankasri
Pakistan
India
By Sumithiran
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, போதுமான உடல் செயல்பாடு இல்லாததில் தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 37.2% பேர் பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவும், ஆண்களில் 28.7% பேருடன் ஒப்பிடும்போது 44.8% பெண்கள் குறைவான சுறுசுறுப்புடன் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் செயற்பாடு
இந்தியா அதன் மக்கள்தொகையில் 49.4% பேர் செயலற்றவர்களாகவும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 45.7% பேருடன் பிராந்திய பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது.

உலக சுகாதார அமைச்சகங்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு நடத்திய கூட்டு ஆய்வில், மாணவர்களிடையே மோசமான எடை மேலாண்மை 21.4% பேர் எடை குறைவாகவும், 12.1% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனுடனும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்