முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முட்டை விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மாதம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
முட்டை இறக்குமதி
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றை 38 அல்லது 40 ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கேக் மற்றும் வெதுப்பக தொழிலுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிக்கும் வகையிலும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |