இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்
Sri Lanka Tourism
India
Tourism
By Laksi
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜீன் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 15,666 பேர் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை
இந்நிலையில் இந்தியாவில் இருந்து 4,347 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,360 பேரும், சீனாவில் இருந்து 1,063 பேரும், பங்களாதேஸில் இருந்து 867 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி கடந்த மாதத்தில் 112,128 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்