சாரதி மற்றும் நடத்துநர்களுக்கு கொரோனா -முடங்கியது இலங்கை போக்குவரத்து சபை
Covid-19
Self-isolation
By Vasanth
தனமல்வில பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் ஆறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த டிப்போ முடக்க நிலைக்கு சென்றுள்ளது.
கட்ந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நடத்துநர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து டிப்போவில் பணியாற்றும் 103 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் நேற்றையதினம் எவரும் கடமைக்கு சமுகமளிக்கவில்லை.
இதனால் டிப்போவிலிருந்து எந்தவொரு பேருந்து சேவையும் நடைபெறவில்லை என டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி