விவசாயத்தை அழித்து மக்களின் சாபத்திற்கும் கோபத்திற்கும் உள்ளானவரே மகிந்தானந்த!
Mahindananda Aluthgamage
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Kalaimathy
நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் மகிந்தானந்த அலுத்கமகேயும் ஒருவராகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விவசாய அமைச்சராக இருந்து விவசாயத்தையே அழித்து உணவுப் பஞ்சத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளானவரே மகிந்தானந்த.
சரியாக வழிநடத்த முடியாமல் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்திற்கு தள்ளிய இவரைப் போன்றவர்கள், தற்போது எரிபொருளுக்காக ரஷ்யாவுடனும் அமீரகத்துடனும் பேசுகின்றோம் என்று ஊடகங்களின் முன் வந்து சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
