வீட்டை நொருக்கிய சம்பவம்! நேரடி விஜயம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவன் (காணொளி)

Matale
By pavan Aug 20, 2023 02:13 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

மாத்தளையில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் வீட்டை உடைத்த சம்பவம் தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடைக்கப்பட்ட வீட்டிற்கு பதிலாக, புதிய வீடொன்றை நிர்மாணித்துக்கொடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டார்.

மாத்தளை எல்கடுவ, ரத்வத்தை பகுதியிலுள்ள குறித்த வீடு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், தோட்ட நிர்வாகத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஜீவன் தொண்டமான் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அதையடுத்து, தோட்ட உயர் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

அத்துடன், குறித்த குடும்பம் தற்போது வாழும் லயன் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக வீடுகளை நிர்மாணித்து கொடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


முதலாம் இணைப்பு

மாத்தளை - எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட , ரத்வத்த கீழ் பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் குறித்த குடும்பத்தினர் கேட்டுவந்துள்ளனர்.

இதற்கமைய தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர், ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடாவடித்தனம் 

வீட்டை நொருக்கிய சம்பவம்! நேரடி விஜயம் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவன் (காணொளி) | Sri Lanka Up Country People Issues

குறித்த முகாமையாளரின் அனுமதிக்கமைய அந்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன்பு அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு நேற்று(19) உதவி முகாமையாளருடன் சென்ற குழு, அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

மேலும் அந்த உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011