இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து!
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே, இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.
இருப்பினும், மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளதுடன், மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை 2 -1 என அந்த அணி கைப்பற்றியுள்ளது.
முழு விபரம்
நியூஸிலாந்தின் குயீன்ஸ்டவுனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தடுமாறு பணித்திருந்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில், பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 73 ஓட்டங்களையம், குசல் பெரேரா 33 ஓட்டங்களையும், தசுன் சானக்க 15 ஓட்டங்களையும், சரித் அசலங்க 3 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்ஜய டி சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
183 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில், ரிம் செய்ஃபெட் 88 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக அணிக்குப் பெற்றுக் கொடுத்தார்.
