நியூசிலாந்துக்கு எதிரான போட்டி - 305 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி
புதிய இணைப்பு
இலங்கை (srilaka) மற்றும் நியூசிலாந்து (new zeland) அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்றுவருகின்றது.
இன்றைய போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அபாரமான இன்னிங்ஸை ஆடிய கமிந்து மெந்திஸ் 114 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் வில்லியம் ஓ ரூக் 3 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை (srilanka) மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
போட்டியில் சற்று முன்னர் வரை இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் (Angelo Mathews) உபாதைக்குள்ளாகியுள்ளார்.
முதற்கட்ட சிகிச்சைகள்
ஆட்டத்தின் 22 ஆவது ஓவரில் வில்லியம் ஓ ரூர்க் வீசிய பந்து மெத்தியூஸின் வலது கை ஆள்காட்டி விரலில் தாக்கியது.
பின்னர், பிசியோ அழைக்கப்பட்டு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
அதையடுத்து தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ், 24 ஆவது ஓவரில் 12 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
அவர் மீண்டும் பேட் செய்யத் தகுதியானவர் என மதிப்பிடப்பட்டுள்ளார், எலும்பு முறிவு ஏதுமின்றி சிறிய வீக்கம் மாத்திரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |