இறுதிவரை பரபரப்பான ஆட்டம் : இரண்டாவது போட்டியில் சிம்பாப்வேயை வீழ்தியது இலங்கை
சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியானது, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (08) நடைபெற்றது.
அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 208 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஆட்டநாயகன்
209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை அணியின் ஜனித் லியனகே சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 127 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் களம் இறங்கிய துஷ்மந்த சமிர மற்றும் மஹிஷ் தீக்சன ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்படி, ஜனித்தின் துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அத்துடன், அவர் தனது இனிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் பெற்று, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
பந்து வீச்சில் அபாரம்
இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மகிஷ் தீக்சன 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், பந்து வீச்சில் துஷ்மந்த சமிர மற்றும் ஜெஃப்ரி வான்டேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |