அபார வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சுப்பர் - 6 சுற்றுப்போட்டியில் இன்று சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதியிருந்தன.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணியை பணித்திருந்தது.
சிம்பாப்வே அணி

அந்தவகையில், முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி 32.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து165 ஓட்டங்களை பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் சேன் வில்லியம் 56 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராசா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி

தொடர்ந்து, 166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 33.1 ஓவர்கள் நிறைவில் 01 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணியின் சார்பில், பெத்தும் நிஸ்ஸங்க 101 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸங்க 102 பந்துகளுக்கு முகங்கொடுத்து 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், சிம்பாப்வே அணியின் ரிச்சர்ட் கரவா 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்