2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 3
2009 இறுதி யுத்தம் என்பது பல நாடுகளின் இரகசிய உதவிகளோடு பாரிய யுத்த விதி மீறல்களோடு சிங்கள ராணுவத்திற்கு உலகநாடுகள் போட்ட பிச்சை வெற்றி ஆகும்.
அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பாக்கிஸ்தான் எப்படி உதவியது என்பது பற்றிய விரிவான பார்வையே இப்பதிவு
200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவிகளையும், ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும், ரொக்கெட் குண்டுகளையும், கண்ணி வெடிகளையும், தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களையும், உளவுத் தகவல்களையும், போர் விமானங்களையும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களையும் பாக்கிஸ்தான் வழங்கியது.
ஜூன் 1999 - டிசெம்பர் 2007 கால கட்டத்தில் பாக்கிஸ்தானிடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான போர் கருவிகளை இலங்கை வாங்கியுள்ளது.
2009 இல் இது 150 மில்லியன் டொலராக உயர்ந்தது. பாக்கிஸ்தானின் ISIயிடம் பயிற்சி பெற்ற இல்ஸாமிய பாதுகாப்பு படையினர் (home-guards) கிழக்கிலும், மேற்கில் சில பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பற்றி உளவுத் தகவல்களை சேகரித்து இலங்கை அரசுக்கு கொடுப்பதில் முக்கியப் பங்காற்றினர்.
தாக்குதலிலும் ஈடுபட்டனர்
பாக்கிஸ்தானின் விமானப்படைத் துணைத் தளபதி( Vice-Marshal) ஷெஹ்சாத் அஸ்லாம் செளதிரி இலங்கைக்கான ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அவரின் நியமனத்திற்குப் பிறகு 15 - 17 அனுபவமுள்ள இராணுவ விமானப்படை வீரர்கள் பாக்கிஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகள் மீதான தாக்குதலிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
மே 2008 இல், இலங்கை தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பாக்கிஸ்தான் இராணுவத்துடன் இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தையின் ஈடுபட்டார்.
22 Al-Khalid MBT பீரங்கிகளை 100 மில்லியன் டொலருக்கும் அதிகமாக கொடுத்து இலங்கை அரசு வாங்கியது. 20 மில்லியன் டொலர் மதிப்பிலான 1,50,000 60mm பீரங்கி குண்டுகள், 1,50,000 கை எறி குண்டுகள் ஆகியவற்றையும் பாக்கிஸ்தான் அரசு வழங்கியது.
25 மில்லியன் டொலர் பெருமானமுள்ள 81 mm, 120 mm மற்றும் 130 mm மோட்டர் குண்டுகளை ஒரே மாதத்திற்கு தருமாறு இலங்கை அரசு பாக்கிஸ்தான் அரசிடம் ஏப்ரல் 2009 இல் கேட்டுக் கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 2 |
2009 இறுதி யுத்தத்தின் மறைக்கப்பட்ட பக்கம் - கூட்டு கொலையாளி 1 |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.