இறுதி யுத்த தாக்குதல்களை அங்கீகரித்து மன்னிப்பு கோரவேண்டும்! சிறிலங்காவின் போர்க்கால முகத்திரையை கிழித்த ஐ.நா

Human Rights Commission Of Sri Lanka United Nations Mahinda Rajapaksa Sri Lanka Final War
By Dharu Nov 26, 2026 11:36 AM GMT
Report

 இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப்பகுதிகளில் மனிதாபிமான, மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) அறிக்கை வெளியிட்டுள்ளது.

போரின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முறையாக அங்கீகரித்து, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதன்படி அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “20 ஆண்டுகள் கடந்தும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை” எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ. நா அறிக்கையின் எதிரொலி! யுத்தகால விசாரணைக்கு தயாராகும் அநுர அராங்கம்

ஐ. நா அறிக்கையின் எதிரொலி! யுத்தகால விசாரணைக்கு தயாராகும் அநுர அராங்கம்

தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல

I Died Many Times என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த 40 பக்க அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

இறுதி யுத்த தாக்குதல்களை அங்கீகரித்து மன்னிப்பு கோரவேண்டும்! சிறிலங்காவின் போர்க்கால முகத்திரையை கிழித்த ஐ.நா | Sri Lanka War Time Conspiracy Made Public By Un

மேலும், போர்க்கால மீறல்கள் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2006 முதல் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மருத்துவமனைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல.

மேலும், போர்க்களத்தில் நடக்கும் குற்றங்களை சுயாதீனமான பார்வையாளர்கள் நேரில் பார்ப்பதைத் தடுக்கவும், பொதுமக்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் முடக்கவும் மனிதாபிமான உதவிகளுக்கான வாய்ப்புகள் திட்டமிட்டே முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் Action Against Hunger நிறுவனத்தைச் சேர்ந்த 17 உள்ளூர் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக அமைகிறது.

இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை

இலங்கை மனித உரிமைகள் நிலைமை : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை

தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு நடைமுறை

குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு நான்கு முக்கிய நடைமுறைகளே காரணம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதி யுத்த தாக்குதல்களை அங்கீகரித்து மன்னிப்பு கோரவேண்டும்! சிறிலங்காவின் போர்க்கால முகத்திரையை கிழித்த ஐ.நா | Sri Lanka War Time Conspiracy Made Public By Un

1. நடந்தது குறித்து அரசாங்கம் தனது பொறுப்பைத் தொடர்ந்து மறுத்து வருவது.

2. உள்நாட்டு விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரல்கள் நீதியைப் பெற்றுத் தருவதில் தோல்வியடைவது.

3. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும் முறையான பாதுகாப்பின்மையும்.

4. முறையான சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயனற்ற விசாரணை ஆணையங்களை மட்டுமே நியமித்து காலத்தைக் கடத்தியது என அறிக்கையில் அடிகோடிடப்பட்டுள்ளது.

இதன்படி போரின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முறையாக அங்கீகரித்து, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. '

மேலும், இந்த விவகாரத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், தொடர்புடையவர்கள் மீது தடைகளை விதிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.

இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்

இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018