குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
எம் பொக்ஸ் (mpox) எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் முதலாவது நபர் நேற்று (9) அடையாளங்காணப்பட்டுள்ளார்.
மேலும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சு அறிவிப்பு
இந்நிலையில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே (India) வருவதால் இந்த நோய் தொடர்பில்அவதானத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருப்பதால் சமூகத்திற்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குரங்கு காய்ச்சல் தொடர்பில் விமானநிலையங்கள் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தளங்களிலும் அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |