ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!
புதிய இணைப்பு
ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சுகாஸ் கனகரத்தினம் (Kanagaratnam Sugash) ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS
முதலாம் இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது (09) இன்று திருகோணமலையில் (Trincomalee) உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்டபணிமனையில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan)ஆகியோருக்கு இடையிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல்
இந்த சந்திப்பில் நீதியான தேர்தல், தேர்தல் வன்முறை சம்பவங்கள், தற்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று இடம் பெறவேண்டும் தொடர்பாக இங்கு உரிய கண்காணிப்பு குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் எடுத்துரைக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கைக்கான (Sri lanka) அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழுவினர், சண்முகம் குகதாசனை (K. S. Kugathasan)06.09.2024 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |