இரத்து செய்யப்பட்டது வர்த்தமானி அறிவித்தல்!
sri lanka
gazette
water bottle
By Kalaimathy
உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி உள்நாட்டில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து 2018 செப்டெம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
