இன்று சூரியனின் ஒளி நேராக இலங்கையில் படும் பகுதிகள் இவைதான்..
srilanka
wather
By Vasanth
சபரகமுவ மாகாணத்தின் ஒரு சில இடங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.
எனினும் நாட்டின் மற்ற இடங்களில் மழை பெய்யாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலையில் மூடுபனி ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால் ஏப்ரல் 5 முதல் 14 வரை சூரியன் அட்ச ரேகைக்கு மேலே இருக்கும்.
இதனால் இன்று (05) மதியம் 12:13 மணிக்கு தெல்வத்த, பத்தேகம, தெதியவல, முலஎயன, அங்குனகொலபெலஸ்ஸ, உடமலல பகுதிகளுக்கு சூரியன் நேராக உச்சம் கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்