தென்னாசியாவில் விரைவில் முதலிடத்தை பிடிக்கவுள்ள இலங்கை
srilanka
namal rajapaksha
south asia
By Sumithiran
இலங்கையில் இதுவரை 72 இலட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றில் 44 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அதன் இரண்டாவது தடுப்பூசி 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஒரு இலட்சத்து 57 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பைஸர் தடுப்பூசியின் முதலாவது மாத்திரை 47 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. கொவிஷீல்ட் தடுப்பூசி ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மொடர்னா தடுப்பூசியும் மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.
தெற்காசியாவில் விரைவில் தடுப்பூசியை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் வரவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்