கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளர்!
Sri Lanka
Wimal Weerawansa
By Vasanth
கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதான நிர்வாக அதிகாரியாக அனுஷ பெல்பிட்ட கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி