இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி...!

Cricket Sri Lanka Cricket Ireland Cricket Team International Cricket Council
By Pakirathan Apr 18, 2023 11:03 AM GMT
Report

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி முன்னிலை

இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி...! | Sri Lanka Won Innings And 280 Runs Vs Ireland

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023