தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை இராணுவம்! வெளியானது காரணம்
தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்கு இலங்கையின் இராணுவம் ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைதி காப்பு பணிகளின்போது, இலங்கை இராணுவத்தின் மனித உரிமைப் பதிவுகள் குறித்து கடுமையான அதிருப்தி இருந்தபோதிலும், இலங்கையின் இராணுவக் குழு தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, தெற்கு சூடானுக்குச் செல்லும் குழுவில் 14 இராணுவ அதிகாரிகள், 01 கடற்படை அதிகாரி மற்றும் 49 ஏனைய அணிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 64 இராணுவ உறுப்பினர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கை வெளியானதோடு இலங்கை அமைதி காக்கும் படையினர் அனைவரையும் இடைநிறுத்துமாறும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |