இத்தாலியில் இலங்கையர் கைது
Sri Lanka
Italy
By Sumithiran
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிய யுவதி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை வன்புணர்வு செய்ய முயற்சி

காலைவேளை வேலைக்குச் சென்று கொண்டிருந்த 25 வயதுடைய யுவதியை சந்தேக நபர் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த யுவதியை சந்தேக நபர், பூங்காவிற்கு இழுத்துச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிலர் வந்ததை அடுத்து சந்தேகநபர் தப்பிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி