கடத்தப்பட்ட எரிபொருள் கப்பலில் இலங்கையர்! வெளியாகிய அறிக்கை
சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் போக்குவரத்து கப்பலில் பணிபுரிந்த 17 ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் இலங்கையர் 01, பாக்கிஸ்தானியர்கள் - 10, இந்தோனேசியர்கள் - 04, இந்தியர் - 01, மியான்மார் பிரஜை - 01 என பணியாளர்கள் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 18,500 எரிபொருள் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலிய கடற்கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்டுள்ளது.
17 ஊழியர்கள்
தற்போது கப்பலும் அதன் 17 ஊழியர்களும் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலிய கடற்கரைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து சோமாலிய அதிகாரிகளோ அல்லது அந்த கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படையினரோ இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியுடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்