சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவின் சுவை...குவியும் பாராட்டு!
இலங்கையின் பாரம்பரிய உணவை அவுஸ்திரேலியாவில் (Australia) நடைபெறும் மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா (MasterChef Australia) போட்டியில் சமைத்து மண் வாசத்தை உலகறியச் செய்த தர்ஷ் கிளார்க் (Darrsh Clarke) இற்கு உலகளவில் பலதரப்பட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, அவுஸ்திரேலியாவின் (Australia) பேர்த் (Perth) ஐச் சேர்ந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷ் கிளார்க், மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா (MasterChef Australia) நிகழ்ச்சியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.
போட்டியில் பங்கேற்றதிலிருந்து, தர்ஷ் முதன்முறையாக தனது இலங்கை பாரம்பரிய உணவை சமைத்துள்ளார், இதில் அவர் பாசுமதி சாதம் மற்றும் தயிர் பச்சடி, கத்தரிக்காய் கறி என்பவற்றை சமைத்திருந்தார்.
அற்புதமான பரிசு
இதன்போது ஏன் இதற்கு முன் இலங்கை உணவை சமைக்கவில்லை என்று நடுவர்கள் விசாரித்தபோது, தர்ஷ் வளர்ந்து வரும் காலங்களில் அவர் தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே, இலங்கை பாரம்பரிய உணவை சமைத்த தர்ஷை ஊக்குவிக்கும் முகமாக நடுவர் போஹ் லிங்க் ஏவு (Poh Ling Yeow, Master) தர்ஷ் சமைத்த உணவு ஒரு அற்புதமான பரிசு என்று பகிர்ந்து கொண்டார், இது இங்குள்ள பலருக்கும் அவர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஊக்குவிக்கும் என்றும் கூறியிருந்தார்.
தவிரவும், தர்ஷின் சமையல் பாணியானது இந்திய உணவகத்தில் சமையல்காரராக இருந்த அவரது மறைந்த தந்தை மற்றும் அவருக்கு வெதுப்பக விருப்பத்தை தர்ஸுக்கு அறிமுகப்படுத்திய அவரது இலங்கைப் பாட்டி ஆகியோரின் செல்வாக்கை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாரம்பரிய உணவான பாற்சோறு
இந்நிலையில், மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா (MasterChef Australia) வாயிலாக இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் என்ற பெருமையை தர்ஷ் தனதாக்கியுள்ளார்.
This is what #MasterChefAU is all about ❤️ pic.twitter.com/N5NQtC0Lmz
— MasterChef Australia (@masterchefau) May 5, 2024
இதற்கு முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறினை சமைத்து வழங்கி நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |