இலங்கை எரிபொருள் விலை தீர்மானம்! மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து எச்சரிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka Petrol diesel price
By Dharu Apr 07, 2026 12:55 AM GMT
Report

மத்திய கிழக்கு போர் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் கணிசமாக உயரும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(06.04.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர்,

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் இலங்கை நுகர்வோரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார்.

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

உலக சந்தை 

தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, இலங்கையில் ஒரு லீட்டர் டீசல் விலை சுமார் 600 ரூபாய் அளவுக்கு உயர வேண்டிய நிலை உள்ளது. வரிகள் மற்றும் இலாப வீதத்தை உள்ளடக்கிய இந்த விலை, தற்போதைய விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது அரசு நட்டத்தில் விற்பனை செய்வது போல் தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எரிபொருள் விலை தீர்மானம்! மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து எச்சரிக்கை | Sri Lankan Fuel Prices May Increase

பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தனியார் எரிபொருள் நிறுவனங்களின் சுப்பர் டீசல் விலையும் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு இரு முக்கிய தீர்வுகளை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளை அனுமதிப்பது இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும்.இது உற்பத்திச் செலவை உயர்த்தி, அரிசி முதல் கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி வரை அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் வேகமாக உயரச் செய்யும்.

அரசின் 900 பில்லியன் ரூபாய் சேமிப்பிலிருந்து மானியம் வழங்குவது டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம் வழங்கினால், சேமிப்பு விரைவில் தீர்ந்துவிடும்.

போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில் இது ஆபத்தானது என தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒபாமாவை விட சிறந்த ஈரானின் ஒப்பந்தம்

ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒபாமாவை விட சிறந்த ஈரானின் ஒப்பந்தம்

சிறந்த தீர்வு 

பொருளாதார ரீதியாக சந்தை விலைக்கு ஏற்ப விலைகளை மாற்ற அனுமதிப்பதே சரியானது என்று தனநாத் பெர்னாண்டோ கூறினார். ஆனால் ஏழை மக்களுக்கு அஸ்வெசும போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் நேரடி மானியம் வழங்க வேண்டும்.

இலங்கை எரிபொருள் விலை தீர்மானம்! மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து எச்சரிக்கை | Sri Lankan Fuel Prices May Increase

ஒட்டுமொத்த எரிபொருளுக்கும் மானியம் வழங்குவது பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்கே பயனளிக்கும் என்பதால், இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

பரந்த பாதிப்புகள் எரிபொருள் விலை உயர்வு உரங்களின் விலையையும் அதிகரித்து, அடுத்த போக விவசாய உற்பத்தியைப் பாதிக்கும். மக்களின் செலவு குறையும் போது பொருளாதார வளர்ச்சி மந்தமடையும்.

மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் குறைய வாய்ப்புள்ளதால் அந்நியச் செலாவணி கையிருப்பும் பாதிக்கப்படலாம்.

இதன்படி போர் மேலும் நீடித்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களில் மாற்றங்கள் தேவைப்படும் என்பதால், அரசு இப்போதிலிருந்தே முன்கூட்டிய தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

அத்தோடு, மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026