இந்த வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபைக்கு ஏன் இந்த தயக்கம்!

Jaffna Sonnalum Kuttram
By Kajinthan Apr 07, 2026 12:12 AM GMT
Report

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வீதியை 25க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றோம். கிட்டத்தட்ட எமக்கு தெரிய 80 வருடங்களுக்கு மேல் எமது மூதாதையர்கள் இந்த வீதியை பயன்படுத்தியதுடன் தற்போது நாங்கள் இந்த வீதியை பயன்படுத்தி வருகிறோம்.

இந்த வீதியின் ஆரம்பத்தில் உள்ள காணி ஒன்றினை வாங்கிய குடும்பம் ஒன்று, குறித்த வீதி தமக்குரிய வீதி என்றும், நாங்கள் அதனை பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் உட்பட மூன்று நீதிமன்றங்களில் அந்த வழக்கு நடைபெற்றது. பின்னர் குறித்த குடும்பம் அந்த வீதியை தனித்து உரிமை கோர முடியாது என்றும், அனைவரும் அந்த வீதியை பயன்படுத்த முடியும் என்றும் தீர்ப்பளித்தது.

தற்போது மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் க.ஜெசீதன் முன்னர் உறுப்பினராக இருக்கும்போது அந்த வீதிக்கு வந்து, எமது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதன்பின்னர் அந்த வீதியில் உள்ள சேற்றினை எடுத்து தனது உடை முழுவதும் பூசி விட்டு அப்படியே பிரதேச சபையின் அமர்வுக்கு சென்றார்.

குறித்த வீதி புனரமைக்காமல் இருப்பதால் அந்த வீதியில் தான் தடக்கி விழுந்து, உடையில் சேறு பட்டுள்ளதாகவும், எனவே அந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்றும் சபை அமர்வில் கூறினார்.

தற்போது அதே ஜெசீதன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கின்றார். உறுப்பினராக இருக்கும்போது இந்த வீதியின் பிரச்சினை தெரிந்தது, ஆனால் தவிசாளராக இருக்கும் எமது வீதிப் பிரச்சினை மறந்துபோனதா?

அவர் தவிசாளராக வந்த பின்னர் மூன்று தடவைகள் நேரில் சென்று, குறித்த வீதியை பயன்படுத்துமாறு கூறினோம். ஆனால் இதுவரை அதனை புனரமைக்கவில்லை.

குறித்த வீதியை கர்ப்பிணி தாய்மார், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மழை நேரத்தில் மாணவர்கள் காலணிகளை போட்டுக்கொண்டு அந்த வீதியால் நடக்க முடியாமல், பிரதான வீதி வரை கையில் எடுத்து சென்று, அந்த வீதியில் வைத்தே காலணிகளை அணிய வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

அவசரம் என்றால் நோயாளர் காவு வண்டி கூட வரமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலும் தற்போது எமது பகுதிக்குள் இருந்து மூன்று பிள்ளைகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளனர்.

இது எமக்கு பெருமையை தருகிறது. எனவே பிரதேச சபையானது இது குறித்து அதிக கவனம் செலுத்தி வீதியை புனரமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

மரண தண்டனை கிடைத்தும் மனம் மாறாத வித்யா கொலை குற்றவாளி...

மரண தண்டனை கிடைத்தும் மனம் மாறாத வித்யா கொலை குற்றவாளி...

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026