இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை
இலங்கைக்கே (Sri Lanka) உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் (India)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விலங்கியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டினியா வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இலங்கை தங்க முதுகு தவளையை (golden-backed frog) மீண்டும் கண்டுபிடித்தனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள நன்னீர் தவளை இனங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் மட்டுமே காணப்படும்
ஹைதராபாத்தில் உள்ள இந்திய விலங்கியல் துறையைச் சேர்ந்த பரத் பூபதி, காட்டில் உள்ள ஒரு குளத்தின் அருகே இந்த இனத்தின் தவளைகளை சந்தித்த போது இது புதிய இனமாக இருக்கலாம் என்று சந்தேகித்தார்.
இந்திய விலங்கியல் துறையைச் சேர்ந்த தீபா ஜெய்ஸ்வால் இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டினார்.
இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளதுடன் இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் (Hylarana gracilis) என்பதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |