கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 தேரர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!
தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 தேரர்கள், சுமார் 1.1 பில்லியன் ரூபா பெறுமதியான 120 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்களைத் தங்களின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தபோது காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்குள் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தேரர்கள், வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண பொதுமக்களைப் போல உடை அணிந்து செயல்பட்டதற்கான ஆதாரங்கள் அவர்களின் கைத்தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்தத் தேரர்களின் பயணச் செலவுகளைப் பொறுப்பேற்ற பிரதான சூத்திரதாரி, கம்பஹா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல, மாறாக ஒரு பாரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலின் ஒரு பகுதி என்பது அம்பலமாகியுள்ளது.
ஆன்மீகப் பாதையில் வழிகாட்ட வேண்டியவர்கள், நாட்டின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் மதச் சின்னத்தைப் பயன்படுத்தியிருப்பது, இலங்கையின் மத மற்றும் சமூகக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றாகச் சிதைக்கும் ஒரு செயல் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்