சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம் : இந்தியாவிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை
நெடுந்தீவு (delft) கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய (india) கடற்றொழிலாளர்களை கைது செய்ய முயன்ற சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரத்ன (Kshenuka Senaviratne), இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு (jaishankar) அறிவித்ததுடன், இந்திய வெளிவிவகார அமைச்சரையும் புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.
கொழும்பிலும் வெளியிடப்பட்ட எதிர்ப்பு
அத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து தூதரக அதிகாரி ஒருவரை அழைத்து கடற்படை அதிகாரியின் மரணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா கடற்படை வீரர் பலி
கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய கடற்றொழிலாளர்களின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |