ராஜபக்ச கும்பலுடன் இணைந்து ரணில் அராஜகம் - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe SL Protest Sri Lankan political crisis Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan Sep 11, 2022 05:48 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றையதினம் யாழ். மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச கும்பலுடன் இணைந்து ரணில் அராஜகம் - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Sri Lankan Political Crisis Pta Arrest Ranil

“தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பு காரணமாக தற்போதும் 46 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றியவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இதனால் சிங்கள மக்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்தனர். சிங்கள பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் உருவாகும் என குட்டிமணி தெரிவித்திருந்தார். தற்போது என்ன நடக்கின்றது.

காலிமுகத்திடல் போராட்டம் மிக அமைதியாக இடம்பெற்றது. இதன் காரணமாக நாட்டில் பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார்.

ரணில் அராஜகம்

ராஜபக்ச கும்பலுடன் இணைந்து ரணில் அராஜகம் - ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Sri Lankan Political Crisis Pta Arrest Ranil

வெறும் 134 வாக்குகளுடன் நாடாளுமன்றில் அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார்.

போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.

நாட்டில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. பொருட்களின் விலைகளோ அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதற்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து பணம் செலவிடப்படப்போகின்றது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011