ராஜபக்சர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரியாசனத்தில் அமரப்போவது யார்?
ரணில் எனும் நபரைச் சுற்றியே இலங்கை அரசியல் கையாளப்படப் போவதாக துறைசார் அவதானிகள் கூறுகின்றனர்.
ரணில் மீண்டும் அரசியலில் உள்நுழைந்ததற்கான காரணம், இலங்கையை மீட்டெடுக்கவோ அல்லது ராஜபக்சர்களைக் காப்பாற்றுவதோ அல்ல தன்னுடைய கட்சியை மீட்டெடுப்பதே என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ராஜபக்சர்களைக் காப்பாற்றுவதென்பது தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டே அமைந்திருக்கின்றது. ஏனெனின் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து பிரிந்து, தனியான கட்சியை அமைத்து, அதிலிருந்து போட்டியிட்டு ஆளும் கட்சியாக உருவாகி விட்டதை ரணிலால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனை எவ்வாறு மாற்றியமைப்பது, இழந்து போன அதிகாரத்தை எவ்வாறு பெறுவது என்பதைப் பற்றி சிந்தித்தவருக்கு கிடைத்த வாய்ப்பே பிரதமர் பதவி.
ரணில் மீண்டும் அரசியலில் உள்நுழைந்ததற்கான காரணம், ரணிலின் ராஜதந்திரம், ரணில் மீதான சர்வதேசத்தின் நம்பிக்கை மற்றும் இலங்கையின் அரசியல் மாற்று நிலை தொடர்பிலே ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்,
