ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட சிறிலங்கா படையினர் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
சிறி லங்கா இராணுவத்தினரை ரஷ்ய(russia) கூலிப்படைகளுக்கு விற்கும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவைச் சேர்ந்த இலங்கை(sri lanka) வைத்தியர் ஒருவரும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மனித கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும், சார்ஜன்ட் ஒருவரும் கடந்த எட்டாம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.
கடத்தலில் ஈடுபட்ட மருத்துவர்
கடத்தலில் ஈடுபட்ட மருத்துவர் ரஷ்ய தொடர்புகளை பயன்படுத்தி இதனை செய்துவிட்டு தற்போது ரஷ்யாவிற்கு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த குழுவினர் கண்டி மற்றும் குருநாகல் ஹோட்டல்களில் இராணுவத்தினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிகழ்ச்சிகளையும் செயலமர்வுகளையும் ஜூம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரகசியமாக நடாத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மனித கடத்தலில் ஈடுபட்ட கும்பல், ரஷ்யாவின் பின்பகுதி முகாம்களில் கடமையாற்றவென கூறி தலா பதினாறு இலட்சம் ரூபா கட்டணமாக பெற்று இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒவ்வொரு இராணுவ வீரரிடம் இருந்தும்
இந்த கடத்தல் கும்பல் ரஷ்ய கூலிப்படையிடம் இருந்து நாட்டுக்கு அனுப்புவதற்காக பணம் வசூலிக்கும் ஒவ்வொரு இராணுவ வீரரிடம் இருந்தும் இருபத்தைந்து லட்சம் ரூபாய் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
அங்கு சென்ற கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் தாங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் இருபத்தைந்து லட்சம் கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
அடிக்கடி போதைப்பொருள்- ஐஸ் பாவனை
இந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி போதைப்பொருள் ஐஸ் எடுத்துக் கொண்டு முன்னால் செல்வது அவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நாட்டிலுள்ள வீரர்கள் வெளிப்படுத்தினர்.
இதேவேளை ரஷ்ய போரில் இலங்கையர்கள் முன்னோக்கி சென்றால் உக்ரைனில் இருந்து சுடுவார்கள்.பின்வாங்கினால் ரஷ்யாவில் இருந்து சுடுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |