அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி: மேலும் 4 இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம்
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Kiruththikan
இலங்கை திருகோணமலையை சேர்ந்த 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு இராமேஸ்வரத்தை சென்றடைந்த இலங்கை தமிழர்கள் தாமாகவே முச்சக்கரவண்டி மூலம் மண்டபம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இவர்களிடம் மண்டபம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்பு அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி