பெருமளவு தங்கம் கடத்திய இலங்கையர்கள் மடக்கிப் பிடிப்பு
கொழும்பிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற 10 பேர் பெங்களூரில் உள்ள கெம்பேகவ்டா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திக்குறிப்பில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, 8 பெண்களும் 2 ஆண்களும் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், மலவாயிலில் தங்கத்தை மறைத்து வைத்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
இக்குழுவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பிலிருந்து பெங்களூருக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸின் யூஎல் 11 என்ற விமானத்தில் இந்தியாவுக்கு பயணித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 1.5 கோடி இந்தியா ரூபா என இந்திய சுங்க பிரிவினர் தெரிவித்தனர். இது இலங்கை நாணயப் பெறுமதியில் 2.5 கோடி ரூபாவுக்கு அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுடன் தொடர்பைக் கொண்டுள்ள இந்தியர்கள் தொடர்பில் கைதானவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.