இத்தாலியில் மஹிந்தவை சூழ்ந்துகொண்ட இலங்கையர்கள்!
mahinda
people
italy
By Shalini
இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் போலோக்னா நகரில் தங்கியுள்ள பிரதமரைக் காண இத்தாலி வாழ் இலங்கையர்கள் திரண்டு வந்துள்ளனர்.
பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னால் ஏராளமான இலங்கையர்கள் திரண்டு பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் பிரதமருடன் புகைப்படங்களை எடுக்கவம் முயன்றுள்ளனர்.
குறித்த இலங்கையர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.