அரபிக் கடலில் காணாமல் போன "லொரன்சோ புத்தா 4" படகு மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 பணியாளர்களுடன் இலங்கை கடற்தொழில் இழுவை படகு மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீஷெல்ஸ் கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின் போது இலங்கை கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
விக்டோரியா துறைமுகம்
மீட்கப்பட்ட இலங்கை இழுவை படகு சீஷெல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அரேபிய கடலில் 6 பணியாளர்களுடன் இலங்கை மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த சனிக்கிழமையன்று (27) கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல நாள் படகு சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |