வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பவுள்ளோருக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 52,710 கொவிட் நோய்களில் 1,593 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 3,480 புதிய பாதிப்புகளில் 538 மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும் விமானங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கையில் சாதகமான சூழ்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் சுதத் சமரவீர மேலும் குறிப்பிட்டார்.