அதிகாலையில் இடம்பெற்ற கோரசம்பவம்- ஸ்ரீலங்கா நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் அதிகாலை ஒரு மணியளவிலேயே இந்ம விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன வயது 75 என அடையாளம் காணப்பட்டுள்ளது. நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நடிகை இன்று அதிகாலை நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியால் கொழும்புக்கு தனது வானில் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பயணித்த வான் லிந்துலை நகரத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். வானை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் வான் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.











