அரசாங்கத்தை வழிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்! பங்காளிக்கட்சி ஆதங்கம்
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு உள்ளது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Prof.Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தாக்கம் காரணமாக வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமை உள்ளிட்ட காரணிகளினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயனடையும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அமையவில்லை.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம்.
லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கதிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது.
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்கள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்தினாலும், வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பினாலும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை எதிர்க் கொண்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க பயனடையும் வகையில் வரவு - செலவுத் திட்டம் அமையவில்லை.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம். எமது யோசனைகள் தொடர்பில் அரச தலைவர்கள் கவனம் செலுத்தும் விதம் கேள்விக்குறியது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சு மட்டத்திலாவது நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துளோம்.
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு உண்டு.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.