அடுத்த ஆறு மாதங்களை இலக்கு வைத்துள்ள சிறிலங்கா - முக்கிய அறிவித்தல்
புதிய பொருளாதாரத் திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆறு மாத திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டம் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீண்ட கால முடக்க நிலையும் பொருளாதாரத்தை சரிவடையச் செய்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் முறையற்ற, பொருளாதார கொள்கையும் நாட்டின் மோசமான நிலைக்கு காரணம் என்று எதிர் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையிலேயே புதிய பொருளாதாரத் திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார்.