ஆசியாவில் மூன்றாவது இடத்திலும் உலகளவில் ஒன்பதாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்ட இலங்கை!!
srilanka
covid19
corona
death
peoples
By S P Thas
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை நேற்று உலகில் 9வது இடத்திற்கு வந்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக 124 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு மேலாக அமெரிக்கா 8வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் நேற்றைய தினம் கொவிட் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைய காலத்தில் அதிகளவில் கொரோனா மரணங்கள் ஏற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினம் இலங்கை அளவுக்கு மரணங்கள் ஏற்படவில்லை.
கொவிட் மரணங்களின் அடிப்படையில், இலங்கை ஆசிய கண்டத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் இலங்கையை விட இந்தியா மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
கொவிட் மரணங்கள் உட்பட அது தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடும் வேல்ட் மீற்றர் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்