பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ள கோட்டாபய!
vaccine
corona
students
gotabaya
sri Lanka
By Kalaimathy
நாடளாவிய ரீதியி்ல் 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்களுக்கு அவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர் அல்லாத 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு தமது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள சுகாதார பணிமனைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.