சட்டவிரோத மண் கடத்தல்! சந்தேகநபரை மடக்கி பிடித்த காவல்துறையினர்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிவந்த உழவு இயந்திரமொன்று வட்டுக்கோட்டை காவல்துறையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்.வட்டுக்கோட்டை பிரிவிற்குட்பட்ட கடற்கரையில் மண்ணினை உழவு இயந்திரத்தின் மூலம் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்போது வட்டுக்கோட்டை காவல்துறை உத்தியோகத்தர்களான மயூரன் மற்றும் மிகிர்சன் ஆகியோர் சுழிபுரம் பத்திரகாளி கோவில் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தினை மடக்கிப்பிடித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி