வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தாக்குவது தான் ரணிலின் திட்டமா! சஜித் சாடல்
வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தாக்குவது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் புதுமையான கொள்கையா? என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வமான டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட 24 மணிநேரம் கழிவதற்கு முன்னர் கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடுமையான தாக்குதல்

முப்படையினர், காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடையில் சிறிலங்கா அதிபர் செயலக வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையான முறையில் தாக்குதலுக்கு உற்படுத்தப்பட்டனர்.
அந்த தாக்குதலில் பொதுமக்கள், பௌத்த பிக்குகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்போது, ஒன்பது பேர் அத்துமீறல் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த அடக்குமுறை குறித்து அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் சட்டத்தரணிகள் தமது சமூக வலைத்தளங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சஜித் பிரேமதாச

இந்நிலையில் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தாக்குதல் குறித்து சாடியுள்ளார்.
A cowardly assault against PEACEFUL protestors, who agreed to vacate the sites today; A useless display of ego and brute force putting innocent lives at risk & endangers Sri Lanka’s international image, at a critical juncture. https://t.co/E6g9lEUgV1
— Sajith Premadasa (@sajithpremadasa) July 22, 2022
வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தாக்குவது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் புதுமையான கொள்கையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Is attacking foreign journalists the most innovative policy of the new government to promote tourism?
— Sajith Premadasa (@sajithpremadasa) July 22, 2022