திட்டமிடல் இல்லாத பண அச்சடிப்பே நெருக்கடிக்கு காரணம் - சஜித்
sri lanka
money
Sajith
print
By Vanan
திட்டம் இல்லாமல் பணம் அச்சடித்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் போன்ற அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் மீறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“பணம் அச்சிடுவதே தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமாகும்.
திட்டம் இல்லாமல் பணத்தை அச்சடித்ததன் விளைவாக பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மூன்று வேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பொதுமக்கள் மீது சுமையை ஏற்றியதன் பின்னர் அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஊடாக 25 வீத மேலதிக வரி விதிப்பதன் மூலம் நிதி மோசடி செய்ய முயற்சிக்கிறது” என்றார்