ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்குள் இந்தச் சேவை இடம்பெறும். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5,500 பஸ்கள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
சாரதிகள், நடத்துனர்கள் உட்பட தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு அவர்களை பணிக்கு அழைக்கத் தீர்மானித்திருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவை நிமித்தம் வேறு மாகாணங்களில் சேவையாற்றுபவர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதற்கும் போக்குவரத்துச் சபை தயாராக உள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,