இறுதிப் பயணத்திற்கு தயாரானது இலங்கை - கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலை
எமது நாடு ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும் சவப்பெட்டிக்குள்ளே வைத்து அடைக்கப்பட்டுள்ளது. சவப்பெட்டிக்குள்ளே இருக்கும் இலங்கை என்ற நாட்டிற்கு ஆணி அடிப்பது மாத்திரமே இறுதி வேலையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் அழிவை தடுக்க முடியாது
சர்வதேச உதவிகளோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இந்த நாட்டின் அழிவை தடுக்க முடியாது. அதற்கு பிரதான காரணம் இந்த நாட்டின் அரச தலைவரும் பிரதமரும் தான்.
அரச தலைவருக்கோ பிரதமருக்கோ தெரியாது
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அத்தியாவசிய தேவை என்ற ரீதியில் ஒரு வரிசை, ரோக்கனை பெற்றுக்கொள்ள ஒரு வரிசை, என வரிசைகளின் எண்ணிகையோ நீண்டுசெல்கின்றது. அரச தலைவருக்கோ பிரதமருக்கோ அதுபற்றி தெரியாது.
இந்த வரிசைகளினால் பொதுமக்கள் படும் துன்ப,துயரங்கள் அவர்களுக்கு தெரியாது. அவர்களும் இந்த வரிசைகளில் நின்றாலே மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்வார்கள்” என்றார்.
