தமிழர்கள் கண்ணீர் சிந்திய முள்ளிவாய்க்காலின் இன்றைய நிலை: வலிகள் மாறாத அவலம்
இலங்கையின் (Sri Lanka) உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முன்னாள் போர் மண்டலத்தில் வாழும் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லையென இந்திய (India) ஊடகமொன்றின் இலங்கைக்கான செய்தியாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச நிறுவனங்கள், காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளை பொதுமக்கள் எதிர்க்கும் அதே வேளையில் பலர் தங்களின் அன்புக்குரியவர்களை இடைவிடாமல் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடி மற்றும் முறிந்துப்போயுள்ள தமிழ் அரசியல் என்பன அவர்களை மேலும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
தமிழர்கள் கண்ணீர்
15 வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் கண்ணீர் சிந்திய முள்ளிவாய்க்கால் கிராமம் அமைதியாக, பாரிய வெற்றிடமாக காட்சியளிப்பதுடன் பனை மரங்கள் சாலைகளில் வரிசையாக உள்ளன.
எனினும் இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள சிலர், முள்ளிவாய்க்கால் இரத்தக்களரியை காசாவில் இஸ்ரேலின் தற்போதைய கொடிய போருக்கு ஒப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பேரழிவு தந்த போரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு சமூகத்திற்கு குறைவாக சாப்பிடுவது அல்லது உணவைத் தவிர்ப்பது புதிதல்ல என்று பொருளாதார பிரச்சினைகள் குறித்து அங்குள்ள மக்கள் கருத்துக் கூறுகின்றனர்.
பொருளாதார பிரச்சினைகள்
வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் நாட்டின் வறிய மாவட்டங்களில் சிலவற்றின் தாயகமாக உள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு என்பன இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களாக உள்ளன.
இதனடிப்படையில், இலங்கையின் பொருளாதார தாக்கம் தமிழர்களை அதிகமாகவே பாதித்துள்ளது." என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத் தழிழச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |