சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றம் : தயாசிறி ஜயசேகரவின் சூளுரை
சிறிலங்கா சுதந்திர கட்சியை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை என கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எவ்வாறான துரோகங்கள் இழைக்கப்பட்டாலும் தாம் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
கைகோர்த்து செயற்பட போவதாக
தம்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் சில சூழ்ச்சியாளர்கள் நிறைவேற்று சபையின் பூரண அனுமதியின்றி நீக்கி உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் எவ்வாறான விரோதங்கள் இருந்தாலும் எவ்வாறான ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கைகோர்த்து செயற்பட போவதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.