எரிபொருள் விலையேற்றத்தில் உடனடி கவனம் செலுத்துக! அமைச்சரிடம் அவசர கோரிக்கை
ஒன்று அல்லது மூன்று மாதங்களுக்கு இடையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலான யோசனைத் திட்டமொன்று பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தினால் எரி சக்தி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை விலை நிலைமைகளை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விலையில் மாற்றங்களைச் செய்யும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஒரு லீற்றர் டீசலில் 50 ரூபாவும், ஒரு லீற்றர் பெற்றோலில் 17 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உடனடி விலை ஏற்றம் குறித்து கவனம் செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக சந்தை விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட கால அவகாசங்களின் அடிப்படையில் விலை மாற்றம் செய்வதற்கும் அனுமுதி அளிக்குமாறு அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது.
