முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை....! இலங்கை கடும் கண்டனம்
இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் (Canada) சார்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் துரூடோ (Justin Trudeau) வெளியிட்ட அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக வெளியுறவு அ,மைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
தொலைபேசியூடாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டை
அவர் மேலும் கூறுகையில், போர் முடிவடைந்த 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கை, கனடாவின் அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறது.
இந்நிலையிலேயே, கனேடிய பிரதமர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம் பற்றி பேசுகிறார், அதே நேரத்தில் பிற இடங்களில் நடப்பவற்றிற்கும் உதவுகிறார்.
மேலும், இலங்கை தனது பிரஜைகளின் மனித உரிமைக்கான நிலைப்பாடுகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளதுடன் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
அதேவேளை, உலகளாவிய கள ஆய்வு போன்ற செயன்முறைகள் மூலம் சர்வதேச சமூகத்துடன் இணைவதும் அவற்றுள் அடங்கும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |